வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் ஆனந்த குளியல் போடும் பறவைகள்

வ.உ.சி பூங்காவில் பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு நீர் தொட்டியில் நீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. பூங்கா ஊழியர்கள், பறவைகள் மீது தண்ணீரை பீச்சி அடித்தனர். பறவைகளும் பீச்சி அடிக்கும் நீரில் ஆனந்த குளியல் போட்டு சந்தோஷம் அடைந்தன.


கோவை: மிழ்நாட்டில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனாலும், வெப்ப அலை வீசுவதாலும் பொதுமக்கள் முதல்உயிரினங்கள் வரை கோடை வெயிலால் கடும் அவதிக்கு அடைந்துள்ளனர்.



கோடை வெயிலையொட்டி வீட்டு மாடிகளில் நீரும், உணவும் வைத்து பறவைகளின் பசி, தாகத்தை தீர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.



வ.உ.சி பூங்காவில் பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு நீர் தொட்டியில் நீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்க இருக்க கூடிய பறவைகளுக்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள், பறவைகள் மீது தண்ணீரை பீச்சி அடிக்கின்றனர். பறவைகளும் பீச்சி அடிக்கும் நீரில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் ஆனந்த குளியலில் சந்தோசமாக குளித்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...