உடுமலையில் கிராம நிர்வாக அலுவலர் மரணத்துக்கு நீதி கேட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர் கூட்டமைப்பு சார்பில் கருப்பு சாமியின் மரணத்துக்கு நீதி கேட்டும், இறப்பிற்கு காரணமான இருவரை உடனே கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்புசாமி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய கூலநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோமங்கலம் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையில் கருப்புசாமி தன் கைப்பட எழுதிய மரண வாக்குமூலம் கிடைக்கப்பெற்றது. மரண வாக்குமூலத்தில் என்னுடைய சாவுக்கு காரணம் கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா, மக்கள் மித்திரன் ஆசிரியர் மணி ஆகியோர்தான் காரணம் என எழுதி இருந்தார்.



இந்த நிலையில் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் கூட்டமைப்பு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு சாமியின் மரணத்துக்கு நீதி கேட்டும், இறப்பிற்கு காரணமான இருவரை உடனே கைது செய்ய வேண்டும் எனவும், தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் மற்றும் வட்டாச்சியர் சுந்தரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கருப்பு சாமியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை எங்களுக்கு போராட்டத்தை கைவிடமாட்டோம் என கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர். தர்ணா போராட்டத்தின் போது தமிழக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் இடப்பட்டன. உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...