சாலை விபத்தில் கோவை பாஜக நிர்வாகி பலி - சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இரங்கல்

நேற்றிரவு மாதம்பட்டி - சிறுவாணி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பாஜக நிர்வாகி தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.



கோவை: கோவை செல்வபுரம் தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் நரேஷ் குமார் (30). கோவை மாநகர், மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர். இவர் நேற்று (25.04.2024) இரவு மாதம்பட்டி - சிறுவாணி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பைக் எதிரே வந்த மற்றொரு பைக் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட நரேஷ் குமார் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் இன்று (26.04.2024) அதிகாலை அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு பைக்கில் வந்த நபர் காயத்துடன் தப்பினார். இந்த விபத்து குறித்து பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கோவை மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் மறைவிற்கு வானதி சீனிவாசன் எம்எல்ஏ, இரங்கல் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஏப்ரல்.26) தனது முகநூல் பக்கத்தில், கோவை மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர், தெற்கு தொகுதி சக்தி கேந்திர பொறுப்பாளர் நரேஷ்குமார் விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம்சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...