தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுக்கு DST-Inspire ஆராய்ச்சி உதவித்தொகை

இந்த ஆண்டிற்கான DST-Inspire ஆராய்ச்சி உதவித்தொகை பெற்ற மாணவர்களுக்கும், அவர்களின் வழிகாட்டிகள் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர்களுக்கும் முனைவர் வெ.கீதாலட்சுமி பாராட்டு தெரிவித்தார்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பதினைந்து மாணவர்களுக்கு DST-Inspire ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி உதவித்தொகை மாதம் ரூ.37,000/ வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். கூடுதலாக, ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக வருடாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஆராய்ச்சி உதவித்தொகையை உழவியல், பயிர் வினையியல், பயிர் நோயியியல், வேளாண் வானிலையியல், பூச்சியியல், பண்ணை இயந்திரவியல் மற்றும் சக்திப் பொறியியல், மண் அறிவியல் மற்றும் வேளாண்மை வேதியியல், காடுவளர்ப்பு மற்றும் வேளாண் காடுகள், விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், பயிர் மரபியல் மற்றும் இனப்பெருக்கம் ஆகிய துறைகளை சார்ந்த பதினைந்து மாணவர்கள் பெற்றுள்ளனர்.



எனவே, DST-Inspire ஆராய்ச்சி உதவித்தொகை வென்ற ஆராய்ச்சி மாணவர்களை கவுரவிக்கும் வகையில், முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் 25.042023 அன்று அண்ணா அரங்கத்தில் துணைவேந்தர் தலைமையில் பாராட்டுக் கூட்டத்தை நடத்தியது.

முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலக முதன்மையர் முனைவர் ந.செந்தில் வரவேற்புரை வழங்கினார். வரவேற்புரையில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கிடைக்கும் பல்வேறு வகையான உதவித்தொகைகளைப்பற்றி விவரித்தார். இவ்வாண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வருடாந்த சிந்தனைக் கூட்டங்களை மிகவும் முன்னதாகவே ஏற்பாடு செய்து, ஆராய்ச்சி தலைப்புகள் மற்றும் ஆலோசனைக் குழுக்களை அங்கீகரித்ததன் மூலம் பல்வேறு நிதி நிறுவனங்களுக்கு வெற்றிகரமான ஆராய்ச்சி திட்டங்களைத் தயாரிக்க மாணவர்களுக்கு எளிதாக்குகிறது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி தனது தலைமை உரையில், இந்த ஆண்டிற்கான DST-Inspire ஆராய்ச்சி உதவித்தொகை பெற்ற மாணவர்களையும், அவர்களின் வழிகாட்டிகள் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர்களையும் பாராட்டினார். மேலும் மாணவர்களுக்கு INSPIRE திட்டம் பற்றி விரிவான விளக்கத்தை வழங்கினார்.

DST-Inspire (22-27 வயதுடைய மாணவர்களுக்கு) பொறியியல் மற்றும் மருத்துவம் உட்பட அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல் இரண்டிலும் ஆண்டுதோறும், 1000 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குகிறது. மேலும், உதவித் தொகையை பெறுவதற்கு மாணவர் மற்றும் வழிகாட்டியின் சுயவிவரம் மற்றும் வெற்றிகரமான ஆராய்ச்சி முன்மொழிவு ஆகிய மூன்று முக்கியமான கூறுகளை கவனிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பாராட்டு கூட்டத்தில், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் இயக்குனர் முனைவர் இரா.ரவிகேசவன், விதை மையத்தின் இயக்குனர் முனைவர் ர.உமாராணி, பயிர் மேலாண்மை இயக்ககத்தின் இயக்குனர் முனைவர் மு.க.கலாராணி, இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின் இயக்குனர் முனைவர் ப.பாலசுப்ரமணியம், வேளாண் பொறியியல் கல்லூரியின் முதன்மையர் முனைவர் அ. ரவிராஜ், வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் முனைவர் அ.பாலசுப்ரமணியன் மற்றும் 500க்கும் மேற்பட்ட முதுகலை மற்றும் முனைவர் பட்டதாரி மாணவர்கள், உதவித்தொகை பெற்றவர்களின் வழிகாட்டிகள் மற்றும் பல்கலைக்கழக அலுவலர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக முனைவர் பேராசிரியர் கணேசன் நன்றி உரை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...