கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையின் தெருவிளக்குகள் எரியாமல் பொதுமக்கள் அவதி

நேற்று மாலை கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் தெருவிளக்குகள் எரியாமல் போனதால், பெண்கள் உள்பட பொதுமக்கள் அவதி.


Coimbatore:

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றளவு கொண்ட இந்த நடைபாதை மாநகராட்சியால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டது. இந்த நடைபாதையை இரு புறங்களிலும் புதிய எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், பொது மக்களை கவரும் வகையில் மீடியா ட்ரீ, இருக்கைகள், இலவச வைஃபை வசதி என பல்வேறு வசதிகள் நடைபயிற்சி மேற்கொள்வோர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் நேற்று ஏப்ரல்.26 மாலை நடைபாதையில் இருபுறங்களிலும் உள்ள தெருவிளக்குகள் பல இடங்களில் எரியவில்லை.

மேலும் பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட இந்த நடைபாதையில் அவ்வப்போது எல்இடி தெரு விளக்குகள் எரியாமல் இருப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...