காங்கேயம் கார் ஸ்டான்டில் நிறுத்திய காருக்கு திருச்சி டோல்கேட்டில் பாஸ்ட் ட்ராக்கில் பணம் பிடிப்பு

காங்கேயம் கார் ஸ்டான்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு திருச்சி மாவட்டம் பொன்னம்பலம்பட்டி பிளாசா சுங்கச்சாவடியை கடந்ததாக கூறி ரூ.125 கட்டணமாக‌ வசூலித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசு‌ மருத்துவமனை வளாகம் முன்புறம் காங்கேயம் வாடகை கார்‌ மற்றும் டெம்போ ஸ்டான்ட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்டோர் டிபோர்டு என கூறப்படும் வாடகை கார்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளாக சொந்தமாக கார் வைத்து சுற்றுலா மற்றும் வாடகை கார்‌ வைத்து படியாண்டிபாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 51) ஓட்டி வருகிறார்.



இந்த நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் வழக்கம் போல் கார் ஸ்டான்ட்க்கு தனது காரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு வாடகை சவாரிக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது சுமார் 11 மணி அளவில் அவரது தொலைபேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதை படித்த மகேந்திரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அருகில் இருந்த மற்ற கார் ஓட்டுநர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த ஓட்டுநர் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



காங்கேயம் கார் ஸ்டான்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு திருச்சி மாவட்டம் பொன்னம்பலம்பட்டி பிளாசா சுங்கச்சாவடியை கடந்ததாக கூறி ரூ. 125 கட்டணமாக‌ வசூலித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கார் ஓட்டுநர் தெரிவித்ததாவது, சுமார் 5 மணி நேரமாக வாடகைக்காக காத்துக் கொண்டுள்ளேன். காலை 7 மணி முதல் 11 மணி வரை காரை எடுக்கவே இல்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் காங்கேயம் பகுதியில் இருக்கும் காருக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்னம்பலம் பட்டி பிளாசா சுங்க சாவடியில் கட்டணம் ரூ. 125 வசூல் செய்தது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அனைத்து வாகனங்களின் பாஸ்டாக் அட்டைகளில் இருந்தும் முறைகேடாக கட்டணம் வசூலிப்பது மிகப்பெரிய கொள்ளையாகும். நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்தை எளிமையாக்கவே இந்த டிஜிட்டல் முறை சுங்கச் சாவடி கட்டணம் செலுத்தும் ஸ்டிக்கர்கள் வாகன முன்பக்க கண்ணாடிகளில் ஒட்டப்படுகிறது.

ஆனால் சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் நிற்கும் காருக்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் இயந்திரம் ஸ்கேன் செய்து பணத்தை எடுத்தது மிகவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து நாங்கள் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். மேலும் இணையவழி மூலமாகவும் புகார் அளித்துள்ளோம். இது குறித்து காவல்துறை உடனடியாக ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பெற்ற பணத்தை திரும்ப வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் இல்லையென்றால் காங்கேயம் வாடகை கார் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துகொள்கிறோம். என தெரிவித்தார்.

சுங்கச்சாவடிகளில் சிறிய தவறுகள் செய்தால் கூட பொதுமக்கள் என்று பாராமல் அடியாட்களை வைத்து தாக்குதல் நடுத்துவதை வாடிக்கையாகவும், அதுபோல் சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள் என்றும் வரையிலும் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொதுமக்கள் தவறு செய்தால் நீதியரசர் போல் தண்டனை வழங்கும் சுங்கச்சாவடி அதிகாரிகள் எந்த ரூ.125 ரூபாய் கையாடலுக்கு என்ன பதில் கூற போகின்றனர். மேலும் இது போல் எத்தனை வாகன ஓட்டிகளிடம் இது போல் நூதன திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதை அரசு அலசி ஆராய்ந்தால் தெரியவரும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...