உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா - இரவை பகலாக்கிய வானவேடிக்கை நிகழ்ச்சி

மாகாளியம்மன் சிம்ம வாகனத்திலும், மாரியம்மன் சூலத்தேவருடன் குதிரை வாகனத்திலும் பரிவேட்டைக்கு எழுந்தருளினர். அப்போது நடைபெற்ற ஊர்வலத்தின் போது நிகழ்த்தப்பட்ட வானவேடிக்கை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் கடந்த 25ம் தேதி நடைபெற்றது.



இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு அம்மன் பரிவட்டைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து குட்டை திடலில் வான வேடிக்கையும் நடைபெற்றது. முன்னதாக மாரியம்மன் சூலத்தேவர் மாகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து மாகாளியம்மன் சிம்ம வாகனத்திலும் மாரியம்மன் சூலத்தேவருடன் குதிரை வாகனத்திலும் பரிவேட்டைக்கு எழுந்தருளினார்கள். கோவில் வளாகத்தில் தொடங்கி உடுமலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் குட்டை திடலை அடைந்தது.



அதைத் தொடர்ந்து அம்மன் முன்பாக வான வேடிக்கை நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. அங்கு தயார் நிலையில் இருந்த வெடிகள் விதவிதமான வண்ணங்களில் வெவ்வேறான ஓசையுடன் வெடித்து சிதறியது.



இதை பொதுமக்கள் நேரிலும், வீடுகளின் மொட்டை மாடிகளில் நின்றும் ஆர்வத்தோடு கண்டு களித்தனர். மேலும் கண்கவர் பல ரகங்களில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள் இரவை பகல் ஆக்கியது. வான வேடிக்கை நிகழ்வையொட்டி உடுமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...