மடத்துக்குளத்தில் வேளாண்மை துறையில் பணியாற்றி வந்த பெண் அலுவலர் தொகுதி 1- தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்

மடத்துக்குளத்தில் வேளாண்மை அலுவலராக பணியாற்றி வந்த இந்திரா பிரியதர்ஷினி என்பவர், தொகுதி-1 தேர்வில் 35-ம் இடம் பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் இந்திரா பிரியதர்ஷினி (28). பிஎஸ்சி வேளாண்மை படித்தவர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் வேளாண்மை அலுவலராக கடந்த 2019-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து பணியாற்றுகிறார். தொடர்ந்து தொகுதி-1 தேர்வில் 35-ம் இடத்தை பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.

பணியாற்றி கொண்டே படித்து தகுதி தேர்வில் வெற்றிபெறமுடியும், சரியாக திட்டமிட்டு படித்தால் பணிப்பளு தடையாக இருக்காது என அவர் கூறினார்.இவரது தந்தை கேசவன் தொழில் செய்து வருகிறார். தாய் ரேகாதேவி செஞ்சேரிப்புத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வெற்றி பெற்ற இவர்க்கு பல்வேறு வாழ்த்துக்களும், பாரட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...