கோவையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை தீர்க்கக் கூடிய கட்சி அதிமுக எனவும், எப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.


கோவை: கோவை சாய்பாபா காலனி NSR ரோடு பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று (ஏப்ரல்.27) நடைபெற்றது.



இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.



பின்னர் மக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் அம்மன்.K.அர்ஜுனன் MLA, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் செ.ம.வேலுச்சாமி, கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கோடைகாலங்களில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருவது வழக்கம் எனவும், இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் நீர் மோர் பந்தல் மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை தீர்க்கக் கூடிய கட்சி அதிமுக என தெரிவித்த அவர், மக்களின் எதிர்பார்ப்பு, மக்களின் நம்பிக்கை தமிழகத்தின் எதிர்காலம் எடப்பாடியார்தான் என தெரிவித்த அவர், எப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...