கோவையில் தங்க நகை தொழில் நடக்கும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை அதிகபடுத்த நடவடிக்கை

தங்க நகை தொழில் அதிகம் நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை அதிகபடுத்தும் விதமாக, கோயமுத்தூர் கைவினைகஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் 25 கண்காணிப்பு கேமராக்களை கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் வழங்கினர்.


கோவை: கோவையில் தங்க நகை தொழிலாளர்களிடம் அதிகரிக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க அதிக கண்காணிப்பு கேமராக்களை வழங்க கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் முன் வந்துள்ளனர்.



தங்க நகை உற்பத்தி தொழிலில் தமிழகத்தில் கோவை நகரம் அதிக முக்கியத்துவம் கொண்ட நகரமாக உள்ளது. கோவையில் நகைகள் தயாரிக்கப்பட்டு கர்நாடாகா, கேரளா மற்றும் வட மாநில பகுதிகளுக்கு கோடிக்கணக்கான மதிப்புடைய தங்க நகைகள் தினமும் கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இது போன்று கொண்டு செல்லும் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்வதும் தற்போது அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் இது போன்று தங்க நகை தொழிலாளியிடம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் பிடித்து விசாரனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இது போன்று கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாகவும், காவல் துறையினருக்கு விசாரனைக்கு பயனளிக்கும் வகையில் தங்க நகை தொழில் அதிகம் நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை அதிகபடுத்தும் விதமாக, கோயமுத்தூர் கைவினைகஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் 25 கண்காணிப்பு கேமராக்களை கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் வழங்கினர்.

சுமார் 100 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை வழங்க உள்ளதாகவும், முதற்கட்டமாக செல்வபுரம் காவல் நிலைய எல்லைபகுதிக்கு 25 கேமாரக்களை வழங்கி உள்ளதாக தெரிவித்தனர்.



இது குறித்து, கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ரகுநாதன் சுப்பையா கூறுகையில், தங்க நகை தயாரிப்பு பட்டறைகள் அதிகமாக உள்ள பகுதியான, செல்வபுரம், ஆர்.எஸ்.புரம், வெரைட்டிஹால் ரோடு உள்ளிட்ட காவல் நிலைய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணிகளை சற்று அதிகப்படுத்தி தங்க நகை தயாரிப்பாளர்களான பொற்கொல்லர்களுக்கும், தங்க நகை மொத்த வியாபாரிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு தர காவல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...