தாராபுரத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை

உயிரிழந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இதுவரை தகவல் தெரியவில்லை. இவரை பற்றி தகவல் தெரிந்தால் தாராபுரம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு அருகே அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடைப்பதாக தாராபுரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் சையது சம்பவ இடத்திற்கு சென்று அடையாளம் தெரியாத நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.



மேலும் அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை. அவர் சட்டை பையில் அடையாளம் தெரியாத ஆண் நபர் பழனியில் இருந்து தாராபுரம் வருவதற்காக பேருந்தில் பயணம் செய்துள்ளார். தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி அவர் 5 சாலை சந்திப்பு அருகே வந்து டீக்கடையில் டீ அருந்து விட்டு அதிக அளவில் வெயிலின் தாக்கம் காரணமாக சாலையோரமாக அமர்ந்தவர் அப்படியே உயிர் இழந்ததாக தாராபுரம் காவல்துறை சார்பில் கூறுகின்றனர்.

மேலும் அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இதுவரை தகவல் தெரியவில்லை. இவரை பற்றி தகவல் தெரிந்தால் தாராபுரம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...