உலகம் முழுவதும் போதைப்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது - பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

விலைவாசி ஏற்றம், மின் கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் மௌன புரட்சியாக பாராளுமன்ற தேர்தல் முடிவில் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்றார்.


Coimbatore:தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் வழங்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளார். இதனையடுத்து பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த 525 வாக்குறுதிகளில் முறையாக எதையும் நிறைவேற்றவில்லை. மக்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். லஞ்ச லாவண்யம் பெருத்து விட்டது. ஜல்லி, மணல் போன்ற கனிம வளங்கள் கடத்தல் அதிகரித்து பல்வேறு சட்டவிரோதம் நடைபெற்று வருகிறது. தமிழகம் ஊழல் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது.



விலைவாசி ஏற்றம், மின் கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் மௌன புரட்சியாக பாராளுமன்ற தேர்தல் முடிவில் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். மேலும் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. எப்படி கடிகாரம் ஏற்றுமதியில் சுவிட்சர்லாந்து முதன்மை நாடாக உள்ளதோ, அதேபோல தமிழகம் உலகம் முழுவதற்கும் போதைப்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...