கோவையில் முன் விரோதம் காரணமாக நடைபெற்ற தகராறில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாளால் வெட்டு

இது குறித்த புகாரின் பேரில், கடைவீதி போலீசார் கதிர்வேல் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.



Coimbatore: கோவை செட்டி வீதி வைசியாள் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(43). ஆட்டோ டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல்(எ) சிங்கான்(40) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல்.27) சுரேஷ்குமார் செட்டி வீதி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த கதிர்வேலுக்கும், சுரேஷ்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கதிர்வேல் தகாத வார்த்தைகளால் பேசி ஆட்டோ டிரைவர் சுரேஷ்குமாரை அரிவாளால் வெட்டினார்.

இதில் பின்னந்தலையில் பலந்த வெட்டு காயமடைந்த சுரேஷ்குமாரை அக்கம்பத்தினர் மீட்டு ஆட்டோவில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில், கடைவீதி போலீசார் கதிர்வேல் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

முன்னதாக, நேற்று இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சற்று முன்பு செல்வபுரம் அசோக்நகரில் டூ-வீலர் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கதிர்வேல் குடிபோதையில் கூலி தொழிலாளி சக்திவேல் முத்து(42) என்பவரை உருட்டு கட்டையால் தாக்கி உள்ளார். 

இது குறித்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீசாரும் கதிர்வேல் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இவர் மீது ஏற்கனவே அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கோவை காவல் நிலையங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...