அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கற்றல் வாய்ப்பு தமிழகத்தில் உறுதி செய்யப்பட வேண்டும் - பிரின்ஸ் கஜேந்திர பாபு

2024-2025 கல்வியாண்டில் அரசு பள்ளிகளும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் குழந்தைகளுக்கு சமமான கற்றல் வாய்ப்புகளை பெரும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சேர்க்க உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.


Coimbatore: கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை அருகாமை பள்ளிகளாக அறிவித்து அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கற்றல் வாய்ப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கற்று வாய்ப்பை பெறுவதற்கு வழிவகுப்பது கல்வி உரிமை சட்ட நோக்கமாகும். அரசின் குறிப்பிலும் செலவிலும் கல்வி அனைவருக்கும் சம வாய்ப்புடன் கிடைக்க அருகாமை பள்ளி அமைப்பு உலக நாடுகளிலும் நடைமுறையாக உள்ளது.

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்று நோக்கத்தில் பள்ளிகளில் குறைந்தபட்சம் 25% வாய்ப்பு மறுக்கப்பட்டவர் மற்றும் நலிந்த பிரிவினருக்கு வழங்க வேண்டும்.



அரசு பள்ளி இருக்கும்போது அரசு கல்வி தரும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் போது அரசை நம்பாமல் தனியார் பள்ளியில் சேர்ப்பது ஊக்கப்படுத்துவது சட்டத்தின் 12 (1) (c) பிரிவின் நோக்கம் என்றும் சட்டத்தின் பிரிவு 8 மற்றும் 12(1)(c) ஆகிய இரண்டையும் முரண்பாடுடன் பார்க்க கூடாது என்று கூறினார்.

2024-2025 கல்வியாண்டில் அரசு பள்ளிகளும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் குழந்தைகளுக்கு சமமான கற்றல் வாய்ப்புகளை பெரும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சேர்க்க உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அத்தகைய நடவடிக்கையை கர்நாடக மாநிலம் ஐந்தாண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

அரசாங்கம் தனது பொறுப்பில் கல்வி உரிமையை வழங்க முன் வரும் போது அதற்கு நீதிமன்றம் என்றும் துணை நிற்கும் என்று கூறினார்.

மாவட்டம்,மாநில,அகில இந்திய மற்றும் உலக நாடுகளுக்கு கல்வி சுற்றுலா எந்தவித கட்டணமும் வசூலிக்காமல் அரசு பள்ளியில் பெயரிலும் மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். மேலும் குழந்தைகள் ஆர்வமுடன் பல்துறை அறிவின் பெறுவதற்கு அனைத்து வாய்ப்புகளையும் தமிழக அரசு உருவாக்கித் தர வேண்டும்.

2024-2025 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைமுறை தொடங்க உள்ள நிலையில் விரைந்து உரிய அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...