எல்லாரும் மனரீதியில் ஒன்றாக சேர்ந்து கோவிலை காப்பாற்றுங்கள் - பொள்ளாச்சியில் முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கவேல் பேட்டி

பிரச்சனை என்று வரும்போது கோவில் சூறையாடப்படுகிறது. இப்போதாவது திருந்தி வாருங்கள். எல்லாரும் மனரீதியில் ஒன்றாக சேர்ந்து கோவிலை காப்பாற்றுங்கள் என்று முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவனடியார்கள், முருக பக்தர்கள் அனைத்து ஆன்மீக அன்பர்களையும் ஒருங்கிணைக்கும் ஆன்மீக விழா நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்.

இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு சிவனடியார்கள், முருக பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் போலீஸ் ஐஜி .பொன்மாணிக்கவேல் பேட்டி அளிக்கையில் கூறியதாவது. இந்துக்கள் உடைந்தனர், ஆதீனம் ஒரு புறம், வைணவர்கள் ஒரு புறம், சைவர்கள் ஒருபுறம் என அனைவரும் உடைந்து தொங்குவதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தொங்கிக் கொள்ளுங்கள். கருத்து வேறுபாடுகள் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் ஒன்றாக வாருங்கள். பிரச்சனை என்று வரும்போது கோவில் சூறையாடப்படுகிறது. இப்போதாவது திருந்தி வாருங்கள் எல்லாரும் மனரீதியில் ஒன்றாக சேர்ந்து கோவிலை காப்பாற்றுங்கள். கோவிலுக்கு மட்டும் பிரச்சினை என்றால் எல்லாரும் ஒன்றாய் சேருங்கள். இந்த கூட்டத்தில் மட்டுமே எல்லாரையும் ஒருங்கிணைக்க காரணம் தனித்தன்மையை வைத்துக் கொள்ளுங்கள் விட்டு விடாதீர்கள்.

சுதந்திரமாக செயல்படுங்கள். ஆனால் பிரச்சனை என்று வரும்போது கோவில் சம்பந்தப்பட்டது கோவில் இருக்கக்கூடிய தெய்வ விக்கிரகங்களுக்கு கோவில் சொத்துக்களுக்கு பிரச்சினை வரும்போது காக்கா கூட்டம் போல் ஒன்றாக வரவேண்டும் என்ற ஒரு சின்ன முயற்சி எடுக்கிறேன். இதிலும் நமக்கு பின் வாங்கியது எல்லாம் வரும் ஜெயிக்க எல்லாம் என்னால் முடியாது நன்றாக தெரியும். பின்வாங்கி வர முயற்சி அதிகம் பன்னிகொண்டேதான் போவேன். எல்லாரையும் ஒன்றாக கொண்டு வருகிறோம் என்றார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...