உக்கடம் வாலாங்குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற கோவை மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை

வாலாங்குளத்தின் மேற்கு புறம் முழுவதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து குளத்தின் தண்ணீர் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு குளம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்களும், பொதுமக்களும் மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: கோவை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது உக்கடம் வாலாங்குளம். இந்த குளம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு குளத்தின் கரையோரம் நடைபாதை செல்வதற்கு ஏற்றவாறு டைல்ஸ்கள் அமைக்கப்பட்டு நடைபாதை செல்வோர் அமர்வதற்கு சிறந்த இட வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த குளத்தைச் சுற்றிலும் சிறிய வியாபார கடைகள், மற்றும் குளிர்சாதன கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் குளத்தின் கரையோரம் பூங்காக்கள் அமைப்பப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.



கிழக்குப்புறம் இவ்வாறு அமைக்கப்பட்ட போதும் மேற்கு புறமாக குளம் முழுவதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து குளத்தின் தண்ணீர் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு குளம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.



எனவே இந்த ஆகாயத்தாமரையை உடனே கோவை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும், அவ்வாறு உடனே அகற்றாத பட்சத்தில் கிழக்கு புறமும் ஆகாயத்தாமரை படர்ந்து குளம் முழுவதும் பரவி விடும். இது இயற்கைக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக இருக்கும். எனவே உடனடியாக இந்த ஆகாயத்தாமரைகளை அகற்றி இதனை சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு பராமரிக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று ஏப்ரல்.29 கோவை மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...