மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

மடத்துக்குளம் பேரூர் திமுக கழகம் சார்பில், இலவச நீர்மோர் பந்தல் மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் திறக்கப்பட்டது. இதேபோல், உடுமலை கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில், தளி சாலை திருப்பத்தில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் தெற்கு மாவட்டம், மடத்துக்குளம் மேற்கு ஒன்றியம், மடத்துக்குளம் பேரூர் திமுக கழகம் சார்பில், இலவச நீர்மோர் பந்தல் மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் இன்று (ஏப்ரல்.29) துவங்கப்பட்டது.



இதை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி மற்றும் முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் இருந்தனர்.



இதேபோல், உடுமலை கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில், தளி சாலை திருப்பத்தில் நீர் மோர் பந்தல் இன்று (ஏப்ரல்.29) துவங்கப்பட்டது.



இதை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி மற்றும் உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் S.K.M.தங்கராஜ், உடுமலை நகர செயலாளர் S.வேலுச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...