வருவாய் ஈட்டுவதில் கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடம் பிடிப்பு - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் இடம் பிடிப்பு

கடந்த நிதி ஆண்டில் ரூ.1216 கோடி வருவாய் ஈட்டி முதலாவது இடத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும், ரூ.564 கோடி வருவாய் ஈட்டி இரண்டாவது இடத்தில் எழும்பூர் ரயில் நிலையமும் உள்ளது. 325 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி மூன்றாவது இடத்தை கோவை ரயில் நிலையம் பெற்றுள்ளது.


கோவை: கடந்த நிதி ஆண்டில் (2023-24) தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டிய 100 ரயில் நிலையங்களின் பட்டியலை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 325 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி மூன்றாவது இடத்தை கோவை ரயில் நிலையம் பெற்றுள்ளது. மேலும் 1216 கோடி வருவாய் ஈட்டி முதலாவது இடத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும், 564 கோடி வருவாய் ஈட்டி இரண்டாவது இடத்தில் எழும்பூர் ரயில் நிலையமும் உள்ளன. கோவையை தொடர்ந்து, திருவனந்தபுரம், எர்ணாகுளம், மதுரை ஆகிய ரயில் நிலையங்கள் வருவாய் பட்டியலில் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...