காட்டன் ரீலிங் தொழிற்சாலையை அப்புறப்படுத்தக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

காட்டன் தூசு அதிக அளவில் வெளியேறுவதால் சுற்றுப்புறச் சூழல், காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படுகிறது. இதனால், தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.


கோவை: நரசிம்மநாயக்கன்பாளையம் பாம்பே நகர் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான, காட்டன் ரீலிங் தொழிற்சாலையால் சுற்றுப்புறச் சூழல், காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படுவதால், தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் இன்று (ஏப்ரல்.29) மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு அளித்துள்ளனர்.

இது குறித்து மனுதாரர்கள் ஜீவானந்தம் மற்றும் கல்யாண சுந்தரம் ஆகியோர் கூறும் போது, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகில் உள்ள குருடம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கதவு எண் 31, பாம்பே நகர் என்ற இடத்தில், ஸ்ரீ குமரன் டெக்ஸ் என்ற பெயரில் காட்டன் ரீலிங் தொழிற்சாலை கடந்த 9 மாத காலமாக இயங்கி வருகிறது.

இந்த இடம் பாம்பே நகர், பாரதி நகர், கல்யாணசுந்தரம் நகர் ஆகிய பகுதிகள் அடங்கிய பகுதியாகும். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஸ்ரீ குமரன் டெக்ஸ்ட் என்ற தொழிற்சாலை அந்த பகுதியில் துவங்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து காட்டன் தூசு அதிக அளவில் வெளியேறுகிறது. இதனால் சுற்றுப்புறச் சூழல், காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படுவதால், தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...