ஒடிசா வாலிபர் கைது: கோவையில் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் பறிமுதல்

பிரியரஞ்சன் சாஹூ (26) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்


Coimbatore: கோவை, செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினருக்கு இன்று (ஏப்.29) ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் மலுமிச்சம்பட்டி - போடிபாளையம் சாலை அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். 

அப்போது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரியரஞ்சன் சாஹூ (26) என்பவர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. 

பின்னர் பிரியரஞ்சன் சாஹூ (26) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதேபோல, சூலூர் காவல் துறையினருக்கு, காடம்பாடி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் இன்று ஏப்ரல்.29 கிடைத்தது. 



அதன் பேரில் உடனே அங்கு சென்ற சூலூர் போலீசார், சோதனை செய்தபோது காடம்பாடி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜபாபு சஹானி (30) மற்றும் விஜய் சஹானி(31) ஆகியோரை கைது செய்தனர். 



பின்னர் அவர்களிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

அதேபோல, மதுக்கரை பகுதியில் உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைன் விற்பனைக்கு வைத்திருப்பதாக மதுக்கரை போலீசாருக்கு இன்று ஏப்ரல்.29 ரகசிய தகவல் கிடைத்தது.



அதன் அடிப்படையில் மதுக்கரை போலீசார் உடனே அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போது உயர்ரக போதை பொருள் வைத்திருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த திவாகர் (23) என்பவரை கைது செய்தனர். 

பின்னர் அவரிடமிருந்து 5.750 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...