அதிகாரிகள் தங்களை அடிமைகள் போல் நடத்துவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் தூய்மைப்பணியாளர்கள் மனு

பணிதள பொறுப்பாளர்கள், தூய்மை பணியாளர்களை ஒருமையில் பேசுவதாகவும், கொத்தடிமைகள் போன்று வேலை வாங்குவதாகவும், ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள அதிகாரிகள் தங்களை அடிமைகள் போன்று நடத்துவதாகவும், இழிவாக பேசுவதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஏப்ரல்.30 புகார் மனு அளித்தனர்.

மேலும் பகுதி நேர வேலை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி மனு அளித்தனர். இது குறித்து பேசிய கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் சங்க உறுப்பினர் ரத்தினகுமார், பகுதி நேர வேலை அளிக்கப்பட வேண்டும் எனவும், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.

அங்குள்ள பணிதள பொறுப்பாளர்கள்,தூய்மை பணியாளர்களை ஒருமையில் பேசுவது, கொத்தடிமைகள் போன்று வேலை வாங்குவது, மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்த அவர், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...