போட்டித் தேர்வுகளில் சாதனை படைத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா

போட்டித் தேர்வுக்கு தங்களை தாங்கள் எவ்வாறு தயார் படுத்தவேண்டும் என்றும், தாங்கள் எவ்வாறு தேர்வுக்கு தயாரானோம் என்ற சில நுணுக்கங்களை பற்றியும் பாராட்டு விழாவில் பங்கேற்ற சாதனை படைத்த மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்களில் பலர், மத்திய தேர்வாணையக்குழு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையம் மற்றும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இந்த ஆண்டும் 3 மாணவர்கள் மத்திய தேர்வாணையக்குழு தேர்விலும், 8 மாணவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையம் தேர்விலும் வெற்றி பெற்று சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இந்த சாதனையாளர்களுக்கு 25.04.2024 அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் நல மையம் சார்பாக அண்ணா அரங்கத்தில் பாராட்டு விழா சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் மிக கடுமையான தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள், முதல் அல்லது இரண்டாம் முயற்சியிலேயே தேர்ச்சி பெற பல்கலைக்கழகத்தின் பாடங்களும், பாடத்திட்டங்களும் பெரிதும் உதவுகிறது.

மாணவர் நல மையத்தின் முதன்மையர் முனைவர் நா.மரகதம் வரவேற்புரை நல்கும் போது மாணவர்களின் திறனை மேம்படுத்துதலில் பயிற்சி வகுப்புகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மதிப்பிற்குரிய துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி தலைமை உரையாற்றினார். அவர் தனது உரையில் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற நமது பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களை பின்பற்றி சாதனை படைத்தவர்களில் பட்டியலில் இடம் பெற வேண்டுமாய் அரங்கில் குழுமியிருந்த மாணவர்களிடம் அறிவுறுத்தினார். மேலும் மாணவர் நல மையத்தின் சேவையை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஆர்வமுள்ளவர்கள் சாதனையாளர்களாக மாற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்றும் உறுதுணையாக இருக்கும் என்று தனது உரையில் கூறினார்.

சாதனை படைத்த 11 மாணவர்களில் மத்திய தேர்வாணையக்குழு தேர்வில் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சுபாஷ் கார்த்திக் இந்திய நிர்வாக சேவை (ஐபிஎஸ்), திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கே.ஓவியா, இந்திய நிர்வாக சேவை (ஐஆர்எஸ்) மற்றும் நித்தீஷ்குமார் மிஷ்ரா, இந்திய நிர்வாக சேவை (ஐபிஎஸ்)-ல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காந்திரியா மற்றும் பி.நித்யா துணை ஆட்சியர் ஆகவும், விக்னேஷ், துணைக் காவல் கண்காணிப்பாளராகவும், அஜித்குமார் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளராகவும், ஜே. வைஷாலி வணிக வரித்துறை உதவி ஆணையராகவும், இந்திரா பிரியதர்ஷினி வணிக வரித்துறை உதவி ஆணையராகவும், சுபமஞ்சரி, வணிக வரித்துறை உதவி ஆணையராகவும், சந்தியா ஸ்ரீ, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளராகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாராட்டு விழாவில் கலந்து கொண்ட போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் உரையாற்றும் போது போட்டித் தேர்வுக்கு தங்களை தாங்கள் எவ்வாறு தயார் படுத்தவேண்டும் என்றும் தாங்கள் எவ்வாறு தேர்வுக்கு தயாரானோம் என்ற சில நுணுக்கங்களை மாணவர்கிடையே பகிர்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் 600 இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். விழாவின் இறுதியாக முனைவர் செல்லமுத்து, பேராசிரியர் மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர் நன்றியுரை நல்க விழாவானது இனிதே நிறைவுற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...