உடுமலை அருகே முறையான குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

முறையான குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாழ்வு சரி செய்து மூங்கில்தொழவு கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யபடும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் தற்காலிகமாக மறியலை மக்கள் கைவிட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மூங்கில் தொழவு ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையில் மூங்கில் தொழுவு கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் வாழ்வு பகுதி பெதம்பம்பட்டியில் உடைந்த உள்ள காரணத்தால் தண்ணீர் முறையாக மூங்கீல் தொழவு கிராமத்தக்கு வருவதில்லை என பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் தெரிவித்து எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்த நிலையில் இன்று ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்துக்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் வாழ்வு உடனே சரி செய்து மூங்கில்தொழவு கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யபடும் என உறுதி கொடுக்கப்பட்டதால் தற்காலிகமாக பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

உடுமலை அருகே கிராம மக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தால் பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...