ரத்தினபுரி அருகே கல்லூரி மாணவரை மிரட்டி செல்போன், பணம் பறிப்பு - 2 மர்ம நபர்களை தேடும் போலீசார்

ரத்தினபுரி ரூட்ஸ் பாலத்தின் அடியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கல்லூரி மாணவரை மிரட்டி செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்ற இரண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கணபதி பாலன் நகரை சேர்ந்தவர் நந்தகுமார்(18). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர், நேற்று (ஏப்ரல்.29) தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக ரத்தினபுரி ரூட்ஸ் பாலத்தின் அடியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 2 பேர் அவரிடம் பணம், செல்போன் தருமாறு மிரட்டி உள்ளனர்.

அவர் கொடுக்க மறுத்ததால் அவரிடம் இருந்த செல்போன் மற்றும்ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து நந்தகுமார் அளித்த புகாரின்பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரிடம் செல்போன், பணம் பறித்துச்சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...