கோவை அருகே இருகூரில் தங்கையை காதலித்த நபரை நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்த அண்ணன்

தனியாக பேச வேண்டும் என கூறி பைக்கில் ஏற்றி தடாகம் பகுதிக்கு அழைத்து சென்று நண்பர்களுடன் சேர்ந்து தங்கையை காதலித்த ஜெயச்சந்திரன் என்பவரை சவுக்கு கட்டையால் அடித்து கொலை செய்த அண்ணணின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் இருகூரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (23). இவர், வெள்ளலூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார். இவர் கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த விவகாரம் பெண்ணின் அண்ணன் சுருளி (எ) சுரேந்திரன்(28) என்பவருக்கு தெரியவந்தது. இதனால் சுருளிக்கும், ஜெயச்சந்திரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 26ம் தேதி சுருளி, ஜெயச்சந்திரன் வேலை பார்க்கும் பெட்ரோல் பங்க்கிற்கு சென்றார். பின்னர் அவரிடம் தனியாக பேச வேண்டும் என கூறி பைக்கில் ஏற்றி தடாகம் பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு சுருளியின் நண்பர்கள் அஜித், நவீன், கார்த்திக், குழந்தை ஆகியோர் இருந்தனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து ஜெயச்சந்திரனை சவுக்கு கட்டையால் சரமாரியாக தாக்கினர்.



பின்னர் அவரை மிரட்டி விட்டு சென்றனர். இந்த தாக்குதலில் ஜெயச்சந்திரனுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. வீட்டுக்கு சென்ற அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயச்சந்திரன் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று ஏப்ரல்.29 உயிரிழந்தார்.

பின்னர் அவரது தாய் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சுருளி, அஜித், நவீன், கார்த்தி, குழந்தை ஆகிய 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...