உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் பணம் எண்ணிக்கை - ரூ.15 லட்சத்து 17 ஆயிரத்து 518 வசூல்

மாரியம்மன் கோவிலில் நிரந்தர மற்றும் தற்காலிக உண்டியல்கள் என மொத்தம் 15 உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் எண்ணப்பட்டது. இதில், மொத்தம் 15 லட்சத்து 17 ஆயிரத்து 518 ரூபாய் வசூல் ஆகியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் விநாயகர், முருகன், மாரியம்மன் தனி தனி சன்னதிகளிலும் அஷ்டதிக் நாகர்கள் அரச மரத்தின் கீழ் எழுந்தருளியும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாரியம்மன் உள்ளிட்ட கடவுள்களை சாமி தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வருகை தருகின்ற பக்தர்கள் நேர்த்தி கடனாகவும், காணிக்கையாகவும் அங்கு நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள 4 உண்டியல்களில் ரூபாய் நோட்டுகள், தங்கம், வெள்ளி மற்றும் நாணயங்களை செலுத்தி வருகின்றனர்.



அத்துடன் நடைபெற்று முடிவடைந்த தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு ஏதுவாக கோவில் வளாகத்தில் நிர்வாகத்தின் சார்பில் 11 தற்காலிக உண்டியல்கள் நிறுவப்பட்டிருந்தது. இந்த உண்டியல்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் இன்று திறக்கப்பட்டு என்னப்பட்டது. அந்த வகையில் நிரந்தர மற்றும் தற்காலிக உண்டியல் உட்பட 15 உண்டியல் திறக்கப்பட்டு அதில் சேகரிப்பட்ட காணிக்கைகள் கோவில் வளாகத்தில் வைத்து எண்ணப்பட்டது. அதன்படி நிரந்தர உண்டியல்கள் மூலமாக ரூ.11லட்சத்து 1 ஆயிரத்து 225 ரூபாயும், தங்கம் 55.77 கிராமும், வெள்ளி 120.38 கிராமும் வசூலானது. அதே போன்று திருவிழா தற்காலிக உண்டியல்கள் மூலம் ரூ.4லட்சத்து16 ஆயிரத்து 518 ம் வசூலானது. ஆக மொத்தம் ரூ. 15 லட்சத்து 17 ஆயிரத்து 518 வசூலானது.



இந்த நிகழ்வில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், இந்து சமய அறநிலைத்துறை மடத்துக்குளம் ஆய்வாளர் சரவணக்குமார், கோவில் செயல் அலுவலர் சி.தீபா, குமரேசன் உள்ளிட்ட பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...