கோவை மாவட்ட திமுக சார்பில் மே தின விழா கொண்டாட்டம் - ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ex.எம்எல்ஏ., முத்தமிழறிஞர் கலைஞரின் சிலைக்கு மாலை மரியாதை செலுத்தினார். பின்னர், ஆட்டோ தொழிலாளர்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கோவை: கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் இன்று மே.1 உழைப்பாளர் தின விழா கொண்டாடப்பட்டது.



இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ex.எம்எல்ஏ., முத்தமிழறிஞர் செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். பின்னர் 200 க்கும் மேற்பட்ட‌ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநகர் மாவட்ட திமுக பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், LPF ஆட்டோ தொழிற்சங்க பொதுச் செயலாளர் ப.வணங்காமுடி,மாநகர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எஸ்.ஜெயக்குமார், மாநகர் மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டெம்போ சிவா, மாநகர் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கராத்தே அர்ஜூனன், LPF ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பூபதி, C.செல்வன், கார்த்திகேயன், வட்டக் கழகச் செயலாளர்கள் கே.ராமநாதன், எஸ்.போஸ், டவுன் பா.ஆனந்தன், சாரமேடு இஸ்மாயில், கேசவன் ex.mc, கழக நிர்வாகிகள், LPF தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...