கோடை விடுமுறை: கோவை நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை..!

மே 1- 31-ஆம் தேதி வரை நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்ட முதன்மை மற்றும் கூடுதல் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் மற்றும் குற்றப் பிரிவு நடுவர் நீதிமன்றங்களில் விசாரணை ஏதும் நடைபெறாது.


கோவை:கோவையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 - ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோடைக் காலத்தையொட்டி மே 1 முதல் 31-ஆம் தேதி வரை நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, கோவை மாவட்ட முதன்மை மற்றும் கூடுதல் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் மற்றும் குற்றப் பிரிவு நடுவர் நீதிமன்றங்களில் விசாரணை ஏதும் நடைபெறாது.

ஆனால், சிறப்பு மற்றும் விரைவு நீதி மன்றங்கள் வழக்கம் போல செயல்படும். மேலும், மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் வழக்கம் போல செயல்படும்.

அதேபோல, மாவட்ட முதன்மை நீதிமன்ற விடுமுறையால், பிணை, முன் பிணை, அவசர வழக்குகள், அவசர சிவில் வழக்குகளை விசாரிக்க கோடைக் கால நீதிமன்றம் செயல்படும் சென்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது வாரத்தில் ஒரு நாள் விசாரணை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...