துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாட்டம்

மே தின விழாவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் பங்கேற்று தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்தார். அப்போது மே தினம் வாழ்க, தொழிலாளர் தினம் வாழ்க என நிர்வாகிகள் கோசங்கள் எழுப்பினர்.


கோவை: கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு அண்ணா தொழிற்சங்க துடியலூர் பகுதி செயலாளர் வி.ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். 2வது வட்ட கழக செயலாளர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். 1வது வட்ட கழக செயலாளர் சாந்திபூஷன் முன்னிலை வகித்தார்.



சிறப்பு விருந்தினர்களாக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ ஒ.கே.சின்னராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு தொழிற்சங்க கொடி ஏற்றினர்.

அப்போது மே தினம் வாழ்க, தொழிலாளர் தினம் வாழ்க என கோசங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் தொழிற்சங்க தலைவர் கண்ணதாசன், அம்மா பேரவை செயலாளர் கவிசந்திரமோகன், பகுதி துணை செயலாளர் சரவண பாண்டியன், துடியலூர் தொழிற் நுட்ப பிரிவு செயலாளர் கெளதம், 14வது வட்ட கழக செயலாளர் பந்தல்வீடு பிரகாஷ், 2ஏ வட்ட கழக செயலாலர் காளிச்சாமி, 15ஏ வட்ட கழக செயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ், 1வது வட்ட பொருளாளர் ராஜகோபால், 1வது வட்ட கழக வர்த்தக அணி செயலாளர் முத்து, முன்னாள் கிளை செயலாளர் சரவணன், 1வது வட்ட கழக துணை செயலாளர் சுசிலா, முன்னாள் துணை செயலாளர் ராஜாத்தி, 14வது வார்டு நடராஜன், கழக உறுப்பினர் விஜயா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.



அதனையடுத்து தேசிய பட்டியல் இன மக்கள் இயக்கம் சார்பாக மே தின விழா துடியலூரில் கொண்டாடப்பட்டது. இதில் அம்பேத்கர் படத்திற்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மலர்கள் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகங்கள், மாற்றுத்திறனாளி மக்களுக்கு அரிசி பைகள், பெண்களுக்கு சேலைகள், ஆண்களுக்கு சர்ட்டுகள் வழங்கினார். இந்த விழாவில் அதிமுக கட்சி நிர்வாகிகள், தேசிய பட்டியல் இன மக்கள் இயக்கத்தினர், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...