மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பு அறையில் கோவை கலெக்டர் ஆய்வு

மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார். கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா? என அங்கிருந்த போலீசாரிடம் அவர் கேட்டறிந்தார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் (ஸ்ட்ராங் ரூமில்) வைக்கப்பட்டுள்ளன.

இங்கு 24 மணி நேரமும் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதுதவிர தமிழ்நாடு சிறப்பு படை போலீசார், உள்ளூர் போலீசார் உள்ளிட்டோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இது தவிர சீல் வைக்கப்பட்ட அறை உள்பட கல்லூரி முழுவதும் 265 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபப்ட்டு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் இந்த பாதுகாப்பு அறையை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் இன்று (01.05.24) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா என அங்கிருந்த போலீசாரிடம் அவர் கேட்டறிந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...