பொள்ளாச்சியில் திமுக சார்பில் மே தின ஊர்வலம் - ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உழைப்பாளர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திமுக சார்பில் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மே தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் தலைமையில் மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் கோவை சாலை, புதிய திட்ட சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று தேர்நிலையம் பகுதியில் நிறைவடைந்தது.



பின்னர் உழைப்பாளர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திமுக சார்பில் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் ஈஸ்வர சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...