ஈச்சனாரி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பொள்ளாச்சியில் இருந்து கோவையை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஈச்சனாரி அருகே திடீரென தீப்பிடிந்து எரிந்தது. காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


கோவை: கோவை-பொள்ளாச்சி ரோட்டில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த நிலையில் இன்று (01.05.2024) மதியம் பொள்ளாச்சியில் இருந்து ஒரு கார் கோவையை நோக்கி பயணித்து கொண்டிருந்தது.

கார் ஈச்சனாரி அருகே வந்து கொண்டிருந்த போது காரில் இருந்து புகை வந்தது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் காரில் இருந்தவர்களை எச்சரித்தனர். இதையடுத்து காரை ஓட்டிய கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் காரை அங்கேயே நிறுத்தினார்.



சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது.

பின்னர் இதுகுறித்து கோவை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக காரில் வந்த 3 பேர் உயிர் தப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...