வால்பாறையில் ஶ்ரீ ராம் எஸ்டேட் விற்பனை செய்தவர் மற்றும் வாங்கியவருக்கு இடையே பிரச்சனை - தங்கும் விடுதிக்கு சீல்

ஶ்ரீ ராம் எஸ்டேட் தங்குக் விடுதியை விற்பனை செய்தவர் மற்றும் வாங்கியவர் ஆகிய இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து, 145 CRPC சட்டத்தின்படி தங்கும் விடுதி பூட்டி சீல் வைக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தனியார் எஸ்டேட் ஸ்ரீராம் எஸ்டேட் உரிமையாளர் ரகுநாத் 2022 வருடம் 6 வது மாதம் 1 கோடி 5 லட்சம் ரூபாய்க்கு பிரபு என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.

கடந்த 2022 ம் ஆண்டு 8 மாதம் எஸ்டேட் உரிமையாளர் ரகுநாத் என்பவர் இறந்து விட்டார். அதன் பின் ரகுநாத் அவரின் மனைவி கவிதா எஸ்டேட்டை விற்பனை செய்ய வில்லை என்றும், 60 லட்சம் பணத்தை தர மறுத்ததாகவும் இது தொடர்பாக வால்பாறை நிதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று இரு தரப்பினருக்கும் ஶ்ரீ ராம் எஸ்டேட் தங்குக் விடுதில் விற்பனை செய்தவர் மற்றும் வாங்கியவர் ஆகிய இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு உள்ளது.



இது தொடர்பாக வால்பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இன்று காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் வால்பாறை வட்டாட்சியர் வாசு தேவன் ஆகிய இருவர் முன்னிலையில் எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பை தங்கும் விடுதியாக மாற்றி வியாபாரம் செய்ததற்காகவும், இருவர் என் பாதுகாப்பு நடவடிக்கையாக 145 CRPC சட்டத்தின்படி தங்கும் விடுதியை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...