வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி தொழிலாளி போராட்டம்

என் மீது எந்த தவறும் இல்லாதபட்சத்தில் எஸ்டேட் நிர்வாகம் சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக கூறி நிரந்தர தொழிலாளியாக பணியாற்றும் வீரமணி என்பவர் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி தொழிலாளர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.ஐயர்பாடி எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளராக வீரமணி 55 வயது என்பவர் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பொழுது உடன் வேலை செய்த தனராஜ் என்பவரிடம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக எஸ்டேட் நிர்வாகம் வீரமணி என்பவருக்கு சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது.



சோக்காஸ் நோட்டீஸ் வழங்கியதை அடுத்து என் மீது எந்த தவறும் இல்லை. நிர்வாகம் ஒரு தரப்பாக செயல்பட்டு வருகிறதுஎன்று கூறி இன்று காலை ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள உயர் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதை தொடர்ந்து வால்பாறை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், தொழிலாளர் நலத்துறை அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துசமரசம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை மின்சாரக் கோபுரத்தின் மேல் இருந்து இறக்கினர்.

இந்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...