சமூக ஊடகங்களில் பரவும் பில்லூர் அணையின் நீர் தடைப்படுவதாகக் கூறும் தகவல்கள் பொய்யானவை

அவசரகால நிலைமையை சமாளிக்க இனி மெயின் குழாயில் வரும் குடிநீரை மேல்நிலை தொட்டியில் ஏற்றி அதே இடத்தில் பொது குழாய்கள் அமைத்து, பொதுமக்கள் நீரை குடிக்க மட்டும் பயன்படுத்த அனைத்து இடங்களிலும் விரைவில் அறிவுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி வதந்தி என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி விளக்கமளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியிலிருந்து அவலாஞ்சி, எமரால்டு, குந்தா அணைகளின் வாயிலாக கெத்தை அணைக்கு தண்ணீர் வந்து, அங்கிருந்து பர்லியாறு நீர்தேக்கம் வழியாக பில்லூர் அணைக்கு நீர் வருகிறது. அதேபோல், கேரளாவில் இருந்து இயற்கையான நீர் வழித்தடங்கள் மூலமும் பில்லூர் அணைக்கு தண்ணீர் வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள சூழலில், பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது.

இதனால் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம் 100 அடி என்றாலும், 40 அடி வரை அணையில் சேறும், சகதியுமாக தான் உள்ளது. 41-வது அடியிலிருந்து தான் நீர் உள்ளது. நேற்றைய நிலவரப்படி பில்லூர் அணையில் 55 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அதாவது, 15 அடிக்கு மட்டுமே நீர் இருப்பில் உள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்ட சப்ளை அடியோடு நிறுத்தப்படலாம், அவசரகால நிலைமையை சமாளிக்க மெயின் குழாயில் வரும் குடிநீரை மேல்நிலை தொட்டியில் ஏற்றி அதே இடத்தில் பொதுகுழாய்கள் அமைத்து, பொதுமக்கள் நீரை குடிக்க மட்டும் பயன்படுத்த அனைத்து இடங்களிலும் விரைவில் அறிவுறுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. இந்த செய்தி ஒரு வதந்தி என்றும், இதுபோன்று போலி செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...