நல்லுசாமியப்பன் தடுப்பணையில் காணப்படும் அரியவகை உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் வைப்பு

ஒரு நீர் நிலையின் முக்கியத்துவம் குறித்து குறிப்பாக நல்லுசாமியப்பன் தடுப்பணையில் காணப்படும் அரிய வகை உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் RAAC & கௌசிகா நீர்கரங்கள் சார்பில் இன்று வைக்கப்பட்டுள்ளன.


கோவை: RAAC & கௌசிகா நீர்கரங்கள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், நல்லசாமியப்பன் தடுப்பணை போன்ற அதிக மாசுபாடுகளுக்கு உள்ளாகும் ஒரு நீர் நிலையை மீட்டெடுப்பது பல சவால்கள் நிறைந்த பயணம். அறிவியல் பூர்வமாகவும் மக்களின் பங்களிப்புடனும் முன்னெடுக்கும்போது மட்டுமே அது சாத்தியமாகும். இதற்கான திட்ட வரைவில் இதுவரை முடிக்கப்பட்டுள்ள பணிகள்:

1. இந்த நீர் நிலையின் மீது மக்களுக்கு உள்ள தற்போதைய கருத்துகளை பதிவு செய்தல் (கடந்த ஆண்டு சாம்பிராணி குட்டை பகுதியிலும் ஐடி பார்க் பகுதியிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது) .

2. பல்லுயிர் சூழலியல் மதிப்பீடுகள் (Biodiversity Assessments). இந்த நீர் நிலையில் எத்தனை வகையான உயிரினங்கள் வாழ்கின்றன என்பதை கண்டறிதல் (ஊர்வன, பூச்சி வகைகள், தாவரங்கள், மற்றும் பறவைகள் உட்பட) (இதுவரை 120 வகையான தாவரங்கள், 100 வகையான பூச்சிகள் மற்றும், மற்றும் 30 வகையான பறவைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன) .

3. கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் சுகாதார கழிவுகளை (Sanitary wastes) அகற்றுதல் (சுமார் 300 கிலோ கழிவுகள் தன்னார்வலர்களைக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது).

4. ஒரு நீர் நிலையின் முக்கியத்துவம் குறித்தும் குறிப்பாக நல்லுசாமியப்பன் தடுப்பணையில் காணப்படும் அரிய வகை உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் இன்று வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கிய ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இன்னும் பல்வேறு கட்ட பணிகள் வரும் நாட்களில் தொடர்ந்து முன்னெடுத்து மக்களிடம் புரிதல் ஏற்படுத்தி நல்லுசாமியப்பன் தடுப்பணையை மீட்டெடுப்போம் என்று RAAC & கௌசிகா நீர்கரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...