வெள்ளகோவிலில் சிக்கன் கடையின் பூட்டை உடைத்து கைவரிசை - ரூ.50 ஆயிரம் பணத்துடன் பிடிப்பட்ட திருடன்

நாகப்பட்டினம் மாவட்டம் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து சிக்கன் கடையில் திருடப்பட்ட ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் பகுதியில் இயங்கி வரும் பிரசித்திபெற்ற வீரக்குமார் கோவில் பின்புறம் உள்ள வீரக்குமார் சிக்கன் கடையில் கடந்த ஏப்ரல் 30ஆம்‌ தேதி இரவு மர்ம நபர் ஒருவர் பூட்டிருந்த கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அதிகாலை கடைக்கு வந்த உரிமையாளர் மற்றும் வேலையாட்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து கடையின் உரிமையாளர் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு வெள்ளகோவில் போலீசார் சிக்கன் கடையின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.



மேலும் நாகப்பட்டினம் மாவட்டம் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் வயது 19 என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.



அவரிடம் இருந்து சிக்கன் கடையில் திருடப்பட்ட ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட மகேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...