குற்றப்பிரிவு ஆய்வாளர் மீனா குமாரியின் செயல்களை வெளிப்படுத்திய ஜூனியர் ரிப்போர்ட்டர் மீது தொடரும் பாதுகாப்பு பிரச்சனை

கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் மீனா குமாரி என்ற முன்னாள் குற்றப்பிரிவு ஆய்வாளர் மீது குற்றங்களை வெளிப்படுத்திய குருஸ் முத்து பிரிண்ஸ் அண்மையில் பல அசவுரியங்களையும், மிரட்டல்களையும் எதிர்கொண்டார். மே 2ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.


கோவை: கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் முன்னாள் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணி புரிந்த மீனா குமாரி மீது பல திடுக்கிட வைக்கும் உண்மை குற்றங்களை ஜூனியர் ரிப்போர்ட்டர் மாதம் இருமுறை இதழின் இணை ஆசிரியர் குருஸ் முத்து பிரிண்ஸ், மாதம் இருமுறை இதழில் அண்மையில் வெளியிட்டிருந்தார்.


அதன் பிறகு மீனா குமாரி ஆய்வாளரால் பல அசவுரியங்களும், மிரட்டல்களும் பல விதங்களில் வருவதால் குருஸ் முத்து பிரிண்ஸ் தனது உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறை தலைவரிடம் அண்மையில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார்.


அந்த புகார் தொடர்பான விசாரணை இன்று (மே.2) கோவை ரத்தினபுரி காவல் நிலைய ஆய்வாளர் மேற்பார்வைக்கு வந்திருந்தது.


பின்னர் விசாரணைக்கு புகார் தாரரான ஜூனியர் ரிப்போர்ட்டர் மாதம் இருமுறை இதழின் இணை ஆசிரியர் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அப்போது எதிர் மனுதாரரும் காவல்துறை ஆய்வாளருமான மீனா குமாரி ஆஜராகாமல் தட்டிக் கழித்து இருந்தார்.


இந்த விசாரணைக்கு பின் பிரின்ஸ் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் காவல்துறையினர் திட்டமிட்டு எனது புகார் மனுவை தட்டி கழித்து ஆய்வாளர் மீனா குமாரியை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு ஒரு ஆய்வாளர் மீது கொடுத்த புகாரினை மற்றொரு ஆய்வாளர் விசாரிக்க பணித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...