முத்தூர் அருகே திருமணம் செய்து வைக்கச்சொல்லி போதையில் தாத்தாவை அடித்து கொலை செய்த பேரன் கைது

குடி போதைக்கு அடிமையான அருண் குமார் என்ற இளைஞர் திருமணம் ஆன பெண்ணுடன் திருமணம் செய்து வைக்குமாறு அவருடைய தாத்தா உடன் போதையில் தகராறு செய்துள்ளார். பின்னர் கைத்தடியை பிடுங்கி அடித்ததில், கீழே விழுந்த முதியவர் உயிரிழந்துவிட்டார்.


திருப்பூர்: காங்கேயம் அடுத்துள்ள முத்தூர் நகரையூரை சேர்ந்தவர் முனியப்பன் இவருடைய மகன் சேமலைக்கு திருமணம் ஆகி அருண்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி வெவ்வேறு நபர்களை திருமணம் செய்துகொண்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய மகன் அருண்குமாரை தாத்தா முனியப்பன் உடன் வாழ்ந்துவந்துள்ளார். மேலும் அருண்குமார் வெங்காய மண்டியில் வேலை செய்து வந்ததாகவும் தெரியவருகின்றது.

மேலும் அருண்குமார் நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் சில நாட்களாக மலையத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆனா பெண்ணை காதலிப்பதாகவும், இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாத்தா முனியப்பன் மற்றும் பேரன் அருண்குமாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் மலை போதையில் வந்த பேரன் அருண்குமார் நான் காதலிக்கும் பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கச்சொல்லி தாத்தாவிடம் சண்டையிட்டுள்ளான். பின்னர் நீ உயிருடன் இருந்தால் நான் அவளுடன் சேர்ந்து வாழமுடியாது என கூறி ஆத்திரம் அடைந்த அருண்குமார் முதியவர் வைத்திருந்த கைத்தடியை பிடிங்கி அவரை சரமாரிய தங்கியுள்ளான்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முனியப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த இரண்டு பெண்கள் காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி முதியவர் முனியப்பன் பலியானார். இதை அடுத்து வெள்ளகோவில் காவல் ஆய்வாளர் செல்வி உதவி ஆய்வாளர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து முனியப்பனை தாக்கி கொலைசெய்த பேரன் அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கணவன் மனைவி விட்டு சென்ற பேரனை பாசத்தோடு வளர்த்திய தாத்தாவுக்கு பேரன் வழங்கிய நன்றி கடன் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சொந்த தாத்தாவையே பேரன் கொலை செய்தது முத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...