வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட இன இயக்குனர் மருத்துவர் ராஜசேகரன் ஆய்வு

பிரசவ வார்டு, புற நோயாளிகள் வார்டு, எமர்ஜென்சி வார்டு, ஐசியு வார்டுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றதா? நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கொடுக்கப்படுகின்றதா? என்று மாவட்ட இன இயக்குனர் மருத்துவர் ராஜசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணியில் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டு உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட இன இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் புதிதாக கட்டப்பட்டு இறுதி நிலையில் உள்ள மருத்துவ புதிய கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற பிரசவ வார்டு, புற நோயாளிகள் வார்டு, எமர்ஜென்சி வார்டு, ஐ சி யு வார்டுகளை முறையாக பராமரிக்கப்படுகின்றதா?.



நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கொடுக்கப்படுகின்றதா?. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகின்றதா? மருந்துகளின் காலாவதி தேதிகள் மற்றும் அனைத்து வார்டுகளின் கழிவறைகள், தண்ணீர் வசதி கிடைக்கிறதா? என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.



புதியதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை உள்ளே நவீன சமையலறை மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து, உணவு கூடம் மற்றும் அனைத்து அறைகளிலும் முழுமையாக சிகிச்சைக்கு வரும் சாமானிய மக்களுக்கு பயன்பாட்டுக்கு உள்ளதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மருத்துவமனையில் காலை 8 மணி மற்றும் மதியம் 2 மணி மற்றும் இரவு 8 ஆகிய நேரங்களில் பணி மாற்றம் செய்து பணிக்கு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் வருகிறார்கள். இந்த சமயங்களில் பணியாளர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வரவில்லை என்று நோயாளிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால நோயாளிகள் காத்து இருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என்று ஆய்வில் தெரிவித்தார்.



புதிய வளாகத்தில் தேவையான உபகரணங்கள் மருத்துவர், செவிலியர், சமையலர், தூய்மை பணியாளர்கள், இரவு காவலர்கள் போன்றவர்களை நியமிக்க வேண்டும் என்று மருத்துவ பணியாளர்கள் தெரிவித்தனர்.

வால்பாறையில் இருக்கக்கூடிய பொதுமக்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டு இன்னும் சில நாட்களில் அனைத்து வசதிகளோடு புதிய மருத்துவமனை கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மாவட்ட இணை இயக்குனர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...