வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதியில் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் கால்பந்து போட்டி

கருமலை பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறக்கட்டளை சார்பாக முதலாம் ஆண்டு கால்பந்து போட்டி ஊசிமலை எஸ்டேட் பகுதியில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் மிக பழமையான பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவர்கள் நீதிபதியாகவும், வழக்கறிஞராகவும், மருத்துவராகவும், உயர் அரசு பதவிகளில் வகித்து வருகிறார்கள். இங்கு படித்த மாணவ, மாணவியர்கள் இந்த அறக்கட்டளை தலைவர் எம்.மாதவன், செயலாளர் எஸ்.சிங்கார முத்து, பொருளாளர் பி.ருக்குமணி ஆகியோர்கள் whatsapp குழு மூலம் இணைந்து கருமலை பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறக்கட்டளை அமைக்கப்பட்டு இந்த அறக்கட்டளை சார்பாக முதலாம் ஆண்டு ஊசிமலை எஸ்டேட் பகுதியில் கால்பந்து போட்டி நடைபெற்றது.

கால்பந்து போட்டியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவர் மருத்துவர் துரைக்கண்ணன் செயலாளர், எஸ்டேட் மேலாளர் செல்வராஜ், அன்பு சேகர் அன்புராஜ், ஊசிமலை எஸ்டேட் ஒர்க்கர்ஸ் கமிட்டி பழனிச்சாமி, வால்பாறை சிடி செல்வகுமார், முகமது கனி, செல்வகுமார், ஆமோஸ் பரமசிவம், சௌந்தர்ராஜ், ஜான் சரவணன் மற்றும் ஊசிமலை முன்னாள் ஆசிரியர் கலைமணி, இந்நாள் ஆசிரியர் உதயகுமார், குட்வின் ஆசிரியர் மற்றும் அமுதா, எஸ்டேட் பொதுமக்கள் கலந்துகொண்டு பெரியவர்கள், குழந்தைகள் என்று கால்பந்து போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் பரிசுகளும் வழங்கி சிறப்பித்தனர்.



இந்த அறக்கட்டளையின் தலைவர் மாதவன் கூறுகையில் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி இந்த முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் அறக்கட்டளை துவக்கப்பட்டு உள்ளது. கருமலை பகுதியில் இருந்து வெளியூர் சென்ற மக்களுக்கும், கருமலை பகுதியில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவர்களுக்கும் உதவி செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உதவிகளும், மருத்துவ உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...