கோவை மாநகர் காவலர்களுக்கான 2 நிமிடம் ஓட்டம் மற்றும் 10 நிமிடம் தியானம் தொடக்கம்

கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 40 ஆண் காவலர்கள், 20 பெண் காவலர்கள் என மொத்தமாக 60 பேர் கலந்து கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பின்னர், 10 நிமிடங்கள் தியானம் செய்தனர்.


கோவை: கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் உடல் நலனையும், மனநலனையும் மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து 48 நாட்கள் ஒரு பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது அது அவர்களுக்கு ஒரு பழக்கமாக மாறிவிடும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.

அதன்படி 48 நாட்களுக்கு கோவை மாநகர் காவலர்களுக்கான 2 நிமிடம் ஓட்டம் மற்றும் 10 நிமிடம் தியானம் ஆகியவற்றை இன்று முதல் தொடங்கியது.



இதில் கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 40 ஆண் காவலர்கள், 20 பெண் காவலர்கள் என மொத்தமாக 60 காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பின்னர், 10 நிமிடங்கள் தியானம் செய்தனர்.



மேற்படி பயிற்சியானது இன்று முதல் தொடர்ச்சியாக 48 நாட்கள் நடைபெறவுள்ளது.



மேற்படி 2 கி.மீ ஓட்டமானது கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் துவங்கி டாக்டர் பாலசுந்தரம் ரோடு, பெண்கள் தொழில்நுட்ப கல்லூரி சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு, அவிநாசி ரோடு வழியாக சென்று மீண்டும் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நிறைவுடைந்தது.

கோவை மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகர், மாநகர ஆயுதப்படை வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயவேல், மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கிட்டு மற்றும் இருபால காவல் ஆளிநர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...