தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி கள ஆய்வு பயிற்சி

திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்களின் முக்கிய வேளாண் நடைமுறைகள், வேளாண் கழிவுகளை முறையாக மாற்றுவது மற்றும் சமச்சீர் உணவின் முக்கியத்துவம் பற்றி வேளாண்மைக் கல்லூரி மாணவர்களுக்கு பேராசிரியர்கள் விளக்கினர்.


திருப்பூர்: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாராபுரம் தொகுதியில் கிராமப்புற தங்கல் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் திருப்பூர் பொங்கலூர் (கே. வி.கே) KVK வேளாண் அறிவியல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு உதவி பேராசிரியர் பூச்சியில் துறை மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சரவணன் விளக்கினார்.



அடுத்ததாக டாக்டர்.துர்க்கையண்ணன் (வேளாண்யியல் இணைப் பேராசிரியர்). திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்களின் முக்கிய வேளாண் நடைமுறைகளை விளக்கினார். டாக்டர்.குருமீனாட்சி (உணவு அறிவியில் இணைப் பேராசிரியர்) வேளாண் கழிவுகளை முறையாக மாற்றுவது மற்றும் சமச்சீர் உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார்.

டாக்டர்.ரேணுகாதேவி (மண் அறிவியல் இணைப் பேராசிரியர்) மண் ஆரோக்கிய மேலாண்மை மண் பரிசோதனை தென்னையின் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விளக்கினார். இறுதியாக டாக்டர். இராஜேந்திரன் (வனவியல் பேராசிரியர்) காங்கேயம் தொகுதியின் சில்வி பாஸ்ச்சர் வேளாண்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...