தாராபுரத்தில் 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - பெண் உட்பட இருவர் கைது

தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு சட்ட விரோதமாக புகையிலை பொருள்களை விற்பனைக்கு எடுத்து வந்த சவுதா கனி என்ற பெண்ணையும், முகமது ரஃபீக் என்ற நபரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 12 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தாராபுரம் நகரின் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சவுதா கனி வயது 35, இவரது கணவர் சையது இப்ராகிம். மேலும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் வயது 47 என்ற நபரும் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர். சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண் உட்பட இரண்டு பேரையும் தாராபுரம் காவல் உதவியாளர் சிவராஜ் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருள்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி சட்ட விரோதமாக புகையிலை பொருள்களை விற்பனைக்கு எடுத்து வந்த சவுதா கனி என்ற பெண்ணையும் முகமது ரஃபீக் என்ற நபரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...