தாராபுரத்தில் தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு - ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு

தாராபுரத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர், மோர், தர்பூசணி, வெள்ளரி ஆகியவற்றை பொதுமக்களுக்கு தேமுதிக மாவட்ட கழக செயலாளர் டீ.ஆறுச்சாமி வழங்கினார்.


திருப்பூர்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணையின்படி திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர் மோர், பாணகம், தர்பூசணி, வெள்ளரி ஆகியவற்றை சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் டீ.ஆறுச்சாமி வழங்கினார்.

இந்நிகழ்வை தாராபுரம் ஒன்றிய கழக செயலாளர் பொன்னாபுரம் நவநீதகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி ஷர்மிளா மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கிரி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக அவை தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், பொருளாளர் அண்ணாதுரை, துணைச் செயலாளர் ஆலாம்பாளையம் கந்தசாமி, நகர செயலாளர் ஷானவாஸ், பொதுக்குழு உறுப்பினர் அலங்கியம் பெரியசாமி, மூலனூர் ஒன்றிய கழக செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வி.ஆனந்தன், கேப்டன் டிவி முனியப்பன், சண்முகசுந்தரம், அலங்கியம் நாகராஜ், மணி, பொன்னாபுரம் காளிமுத்து மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...