தாராபுரம் அருகே குருப்பன் நாயக்கன்பாளையத்தில் இயேசு மீட்பர் ஆலயத்தில் நன்றி வழிபாட்டு விழா நிகழ்ச்சி

குருப்பன் நாயக்கன்பாளையம் கிராமத்தில், தஞ்சாவூர் திருமண்டலம் திருச்சிராப்பள்ளி தென்னிந்திய திருச்சபையின் சார்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சின்னபுத்தூர் சேகரம் இயேசு மீட்பர் ஆலயத்தில் நன்றி வழிபாட்டு விழா நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், சின்னபுத்துர் பஞ்சாயத்துக்குட்பட்ட குருப்பன் நாயக்கன்பாளையம் கிராமத்தில், தஞ்சாவூர் திருமண்டலம் திருச்சிராப்பள்ளி தென்னிந்திய திருச்சபையின் சார்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சின்னபுத்தூர் சேகரம் இயேசு மீட்பர் ஆலயத்தில் நன்றி வழிபாட்டு விழா நிகழ்ச்சி, மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில், வெகு விமர்சியாக நடைபெற்றன.



இந்த நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மறை மாவட்ட தலைவர் பால்ரத்தினம் இறை செய்தி வாசித்தனர். மேலும் இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் டாக்டர் கே. வி.சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு சேகரத் தலைவர் ஜோசப் ரவிச்சந்திரன் வரவேற்பு அளித்து தொடங்கி வைத்தனர்.

இதில் சின்னபுத்தூர், நாரணாபுரம், குருப்பன் நாயக்கன்பாளையம், பஞ்சப்பட்டி, பெரியபுத்தூர், செட்டிபாளையம், பொன்னாபுரம், அம்மாபட்டி ஆகிய சேகரம் பகுதியை சேர்ந்த கிராமங்களில் சுமார் 500க்கு மேற்பட்டோர் திரளாக நன்றி வழிபாட்டு விழாவில் சிறப்பித்து அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சேகரச் செயலாளர் ஜான்சன்,சேகர பொருளாளர் ஜாய் மெர்சி, ரெவரென்ட் சுமதி ஸ்டெல்லா, ரெவரென்ட் பால் மாணிக்கம், ரெவெரென்ட் ரவிச்சந்திரன் மற்றும் சபை நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...