பீளமேடு பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு - சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

பீளமேடு பகுதி தண்ணீர் பந்தல் சாலையில் அதிமுக 24வது வட்டக் கழக செயலாளர் லட்சுமணன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் K.அர்ச்சுணன், K.R.ஜெயராம் ஆகியோர் திறந்து வைத்தனர்.


கோவை: அதிமுக கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கினங்க, கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பீளமேடு பகுதி தண்ணீர் பந்தல் சாலையில் அதிமுக 24வது வட்டக் கழக செயலாளர் லட்சுமணன் ஏற்பாட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.



இதனை கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் K.அர்ச்சுணன் MLA, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R.ஜெயராம் ஆகியோர் இன்று (மே.3) திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கினார்கள்.



இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...