கடும் வெயிலால் பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி பாதிப்பு – நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஆனைமலை, வடக்கி பாளையம், பக்கோதிபாளையம் போன்ற பகுதியில் உள்ள தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


கோவை: தமிழகத்தின் தென்னை நகரம் என்று அழைக்கப்படும் பொள்ளாச்சியில் பிரதான விவசாயமான தென்னை சாகுபடி அதிக அளவில் விவசாயிகள் செய்துள்ளனர். ஆனால் அண்மை காலமாக கேரளா வேர் வாடல் நோய், பூச்சி தாக்குதல் போன்ற காரணங்கள் தென்னை விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. விலை நிலங்களில் உள்ள கிணறுகள் தண்ணீர் இல்லாமலும், நிலத்தடி நீரும் 2 ஆயிரம் அடிக்கு கீழ் சென்றதால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.



மேலும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் ஆனைமலை, வடக்கி பாளையம், பக்கோதிபாளையம் போன்ற பகுதியில் உள்ள தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பச்சை பசேலனு காணப்பட்ட தென்னை மரங்கள் தற்போது கருகி எலும்பு கூடாக மாறியுள்ளது. இந்த காட்சியை கண்டு விவசாயிகள் கடும் வேதனை அடைந்து வருகின்றனர்.

ஒரு சில விவசாயிகள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி தென்னை மரங்களுக்கு ஊற்றி காப்பாற்றி வந்தாலும் தற்போது ஏற்பட்டுள்ள வெயிலின் தாக்கத்தால் தென்னை மரங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளுக்கு நிவாரண வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...