சிங்காநல்லூர் அருகே செல்போன் கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து – போலீசார் விசாரணை

கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த செல்போன் கடை உரிமையாளரை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் வசந்தா மில் ரோட்டை சேர்ந்தவர் தினேஷ் (29). இவர் அங்குள்ள ராமானுஜம் நகரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர் நேற்று (மே.2) கடையை பூட்டி விட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிங்காநல்லூர் அருகே சென்றபோது எதிரே பைக்கில் வந்த 2 பேர் தினேசை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அதில், ஒருவர் கத்தியால் தினேசை குத்தினார். இதை பார்த்த சிலர் அங்கு ஓடி வந்தனர்.

இதைப்பார்த்து இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். பின்னர் கத்திக்குத்தில் காயமடைந்த தினேஷ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...