உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 49 வது பட்டமேற்பு விழா

பட்டமேற்பு விழாவில் பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளநிலை மாணவ, மாணவிகள் 657 பேர், முதுநிலை பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 139 பேர் என மொத்தம் 796 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 49 ஆவது பட்டமேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினரை அவைக்கு அறிமுகம் செய்து வைத்து பேசியதோடு கல்லூரி ஆண்டறிக்கையையும் வாசித்தார்.பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளநிலை மாணவ, மாணவிகள் 657 பேர், முதுநிலை பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 139 பேர் என மொத்தம் 796 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராக கோவை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் முனைவர் வெ.கலைச்செல்வி கலந்துகொண்டு பட்டமேற்பு விழாப் பேருரை நிகழ்த்தி, பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.



அவர்தம் உரையில் , "வாழ்க்கையில் நம்மை நாம் நேசித்தால் மட்டுமே நாம் மற்றவர்களை நேசிக்க முடியும். இந்த பட்டப் பேற்றினைப் பெற்று உச்சம் தொடுவதற்குக் காரணமாகத் திகழ்ந்த, இரத்தத்தையும் வியர்வையையும் சிந்திய பெற்றோர்களை நன்றியோடு நினைத்துப் பாருங்கள்.



நம் உயர்விற்கு நாமே பொறுப்பு, அதே வேளை நாம் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது. அப்படி யாரையும் சார்ந்திராமல் தன்னிறைவோடு வாழ வேண்டுமென்றால் புத்தகத்தை நேசியுங்கள், புத்தகங்கள் மிகச் சிறந்த நண்பர்கள், நீங்கள் படிக்கும் புத்தகம் தான் பரந்துபட்ட இந்த உலகத்தையும், மாறுபட்ட நம்பிக்கையையும் எதிர்காலத்தில் நீங்கள் அமர வேண்டிய இடத்தையும் தீர்மானிக்கும்.



மனிதர்களை எளிதில் அறிந்துகொள்ள மனிதர் மனங்களில் ஒளிந்து இருக்கின்ற எண்ணங்களை அறிந்து கொள்ள வாழ்க்கைப் பாதையில் பயணிக்க புத்தகங்களே நமக்கு உறுதுணையாக அமைகின்றன.

மாணவர்களே,பன்மொழி ஆற்றல் பெற்றவர்களாக தன்னைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களிடமிருந்து நீங்கள் வித்தியாசப்பட்டு இருந்தால்தான் நம்மை உலகம் வித்தியாசப்படுத்தி வியந்து பார்க்கும். மற்றவர்களால் தவிர்க்க முடியாத சக்தியாக உங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

உங்கள் பலம், பலவீனத்தைப் பட்டியலிட்டு பலவீனத்தைப் பலமாக மாற்றிக் கொள்ள வேண்டும். சோம்பேறித்தனத்தை ஒழித்து, உழைக்க வேண்டும். செல்லும் பாதை கல்லும் கரடுமாக இருப்பதைப் போல் தோன்றலாம். ஆனால் அப்பாதையை மென் மலர்ப்பாதையாக மாற்றுவது அவரவர் கைகளிலேயே உள்ளது.



வாழ்வதற்கு ஆயிரம் வாய்ப்புகள் உள்ளன. ஆசைப்பட்டதை இந்தப் பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும். அதற்கு நீங்கள் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும்.

இந்தப் பிரபஞ்சம் உங்கள் வசப்பட வேண்டுமென்றால், முடியாது என்பதை முடித்துக் காட்ட எனக்கான வாய்ப்பினை நான் உருவாக்கிக் கொள்வேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் என்று பேசினார்.

நிறைவாக பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 11 மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வினை வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.சிவக்குமார் ஒருங்கிணைத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...